தளி அருகேவனவரை தாக்கியவர் மீது வழக்கு

Update: 2023-07-01 19:45 GMT

தேன்கனிக்கோட்டை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் சாம்ராஜ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு ஜவளகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியது.. இந்த விபத்தில் சாம்ராஜ் காயமடைந்தார். இதை அறிந்த சூளகுண்டா வனவர் ரமேஷ் என்பவர் விரைந்து சென்று சாம்ராஜ் மீது எந்த தவறும் இல்லை. போலீசார் மூலமாக பேசி கொள்கிறோம் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாப்பையா வனவர் ரமேசை தாக்கினார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் பாப்பையா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்