சேலத்தில் தாய், 3 வயது குழந்தையிடம் சில்மிஷம்தொழிலாளி மீது போக்சோ வழக்கு
சேலம்
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதே நபர் அந்த பெண்ணின் 3 வயது குழந்தையிடமும் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் இதுதொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாய் மற்றும் மகளிடம் சில்மிஷம் செய்தது பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி லத்திப் (45) என்பது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.