ரூ.65 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

ரூ.65 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-19 19:07 GMT

மதுரை புதூர் கணேசபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 54). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜூவிடம் கூறியுள்ளார். அதற்காக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.65 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். மேலும் தான் கொடுத்த பணத்தை ராஜூ திருப்பி கேட்ட போது அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த ராஜூ, புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்