16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது வழக்கு

சங்ககிரி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-06 19:55 GMT

சங்ககிரி

மேட்டூர் அருகே சூரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கருப்பண்ணன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை, கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி எடப்பாடி அருகே விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி விசாரணை நடத்தினார். இதில் குழந்தை திருமணம் நடந்தது உறுதியானதை அடுத்து, இது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கருப்பண்ணன் மீது இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்