தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-04-12 18:45 GMT

சிவகாசி,

சிவகாசி தாலுகாவில் உள்ள எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி மகேஸ்வரி (வயது 56). பால்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகேஸ்வரிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று கருப்பையா, மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்து மகேஸ்வரியின் மகன் மகேந்திரனுடன் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த கருப்பையாவின் ஆதரவாளர்கள் கதிர், கந்தவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியாக கூறப்படுகிறது. இதை மகேஸ்வரி தடுக்க முயன்ற போது அவரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருப்பையா, கதிர், கந்தவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்