பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு

Update: 2023-04-05 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி கருமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் முனிவெங்கடப்பா (வயது 52), ரோஜா நகர் கோவிந்தராஜ் (52), இந்திரா நகர் சூர்ய நாராயணன் (52), சித்தையன் (54), கோவிந்த அக்ரஹாரம் அரியப்பா (40), ஓம் சாந்தி நகர் சங்கர் (36), ரோஜா நகர் பாபு (42), விஜி (52) ஆகிய 8 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரும் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்