மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
சிவகங்கை
காளையார்கோவில் அருகே உள்ள விளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 19). இவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி 8 மாத கர்ப்பம் ஆனார். இதுதொடர்பாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி விசாரணை நடத்தி அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்தார்.