ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளர் மீது வழக்கு

எருமப்பட்டியில் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்த உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-04-02 18:45 GMT

எருமப்பட்டி

எருமப்பட்டி அண்ணா புறநகரை சேர்ந்தவர் நல்லமுத்து என்பவர் மகன் செந்தில் (வயது 34). இவர் ஓட்டல் கடை நடத்தி வைத்துள்ளார். இவரது கடையில் சந்துக்கடைபோல் மதுபிரியர்கள் மது அருந்துவதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓட்டலில் மது குடிக்க அனுமதித்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் செந்தில் மீது எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்