எருமப்பட்டியில்:
எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியில் தங்கவேல் மகன் முருகேசன் (வயது 30) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருளான குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.