அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மீது வழக்கு
சமையலறை திறப்பு விழா கல்வெட்டை உடைத்ததாக அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள விஜயன்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவரும், அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான செல்வராஜ் தனது மனைவி மாவட்ட கவுன்சிலர் அவர் பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை எனகூறி தகராறு செய்து, அங்கிருந்த கல்வெட்டை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.