அலுவலக கட்டிடம் தொடர்பாக தகராறு: கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 18 பேர் மீது வழக்கு

Update: 2023-03-14 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி 4 ரோடு அருகே கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்துவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் அந்த கட்டிட வளாகத்தில் 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த அலுவலக கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் தகராறில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 10 பேர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் என மொத்தம் 18 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்