கவுன்சிலர் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

கவுன்சிலர் கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-10 19:07 GMT

மேலூர், 

மேலூர் நகராட்சியில் மில்கேட் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் எந்திரத்தின் உதவியுடன் சிலர் மண் அள்ளி லாரியில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சங்கீதா மேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று மண் அள்ளும் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி மண் அள்ளியதாக தி.மு.க. கவுன்சிலரின் கணவரான செந்தில்குமார் என்ற முருகன் மற்றும் மலைச்சாமி என்ற பப்புன் ஆகியோரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்