தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-02-28 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜ்குமார். ராஜ்குமாரின் 2 வயது மகள் இனியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு இனியாவை சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பேத்தி இறந்ததால் ஆவேசமடைந்த குழந்தையின் தாத்தா மனோகரன் (வயது 52) அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவசர சிகிச்சை பிரிவு அலுவலர் டாக்டர் சீனிவாசன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மனோகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்