மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்தியதோடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் குமார் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்தயதாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.