பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரு தரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

Update: 2023-01-16 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). விவசாயி. இவரும், ராமர், ஜெயபால் ஆகியோரும் அந்த பகுதியில் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அதே பகுடியை சேர்ந்த முருகேசன், இவருடைய மனைவி அற்புதம் ஆகியோர் அது தங்களுடைய நிலம், ஆகவே அதற்கு பணம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சுப்பிரமணி, முருகேசன், அற்புதம் உள்பட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்