தர்மபுரியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பழைய தர்மபுரி பகுதியில் உள்ள மளிகை கடை அருகே சாலையோரத்தில் நின்றார். அப்போது அங்கு சத்ரியன் (வயது 30) என்பவர் தனது மனைவியை தரக்குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதை மாணவர் தட்டி கேட்டதால் சத்ரியன் கத்தியை காட்டி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.