நெற்பயிரை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது வழக்கு
நெற்பயிரை சேதப்படுத்தியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள விஜயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பெரியவண்டாளை கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவரிடம் நிலத்தை ஒத்திக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கிருஷ்ணமூர்த்தி நிலத்தில் பயிரிட்டிருந்த நெற் பயிரில் சிலர் விஷம் கலந்த பூச்சி மருந்தை தெளித்து பயிரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் உத்தரவின் பேரில் 6 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.