தர்மபுரி:
தர்மபுரி செங்கொடிபுரத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கும், சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ராமதாஸ் (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராமதாஸ், இளம்பெண்ணை திருமணம் செய்து கொளவதாக கூறி, அவருடன் நெருங்கி பழகினார். பின்னர் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, அவரை ஏமாற்றினார். இதுகுறித்து அந்த இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.