வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் கடம்பாநகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் பூபாலமருது (வயது 22). இவரும், அவரது நண்பர்கள் சிலரும் வழிப்பறி வழக்கில் கைதாகி நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகினர். வாய்தா முடிந்து திரும்பி சென்றபோது பூபாலமருது மற்றும் உடன் வாய்தாவிற்கு வந்த மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு மனோஜ் (21), முத்துக்குமார் (22), ஜோதி (21), பாலா (22) ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை குப்பை கிடங்கு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பூபால மருதுவின் தாத்தா செல்லமுத்துவின் வீட்டில் பணமும், நகையும் இருப்பதால் அதனை திருடி இரவோடு இரவாக கோவை சென்று விடலாம் என்று மனோஜ் கூறியுள்ளார். அதற்கு பூபாலமருது மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மற்ற வீடுகளில் திருடினால் சரி என்கிறாய் உன் தாத்தா வீடு என்றால் வேண்டாம் என்கிறாய் என்று கூறி ஆபாசமாக பேசினார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ் உள்ளிட்டோர் சேர்ந்து பூபாலமருதுவை கத்தியால் குத்தி, உருட்டு கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.