தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). இவருக்கும், உறவினரான கிருஷ்ணன் (28) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. பிரச்சினைக்குரிய நிலத்தில் மணிவண்ணனின் தந்தை கண்ணன் குடிசை அமைத்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த கிருஷ்ணன், ரவி, சக்திவேல், லட்சுமி, மணிவண்ணன், அசோக்பாலன், கண்ணன், ரமேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.