போக்குவரத்து விதிகளை மீறியதாக 247 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக 247 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிட்ம் கூறியதாவது:- காளையார்கோவிலில் நேற்று முன்தினம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 247 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தேவர் குருபூஜைக்கு செல்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாமல் விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி சூப்பிரண்டு சிவக்குமார், காரைக்குடி உதவி போலீஸ்சூப்பிரண்டு ஸ்டாலின், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் ஆகியோர் உடன் இருந்தனர்.