தொழிலாளிக்கு கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு

Update: 2022-09-27 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி தாலுகா காவேரிப்பட்டணம் அருகே உள்ள நெடுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 48). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (62). இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் வழித்தட பிரச்சினை கடந்த 6 மாதங்களாக இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி அந்த வழித்தட பாதையில் மகேஸ்வரன் சென்றார். அப்போது அங்கு வந்த வேடியப்பன் இதுகுறித்து கேட்டார். அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் மகேஸ்வரனை வேடியப்பன் தரப்பினர் கல்லால் தாக்கினார்கள். மேலும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மகேஸ்வரன் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வேடியப்பன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்