ஓசூரில் விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு
ஓசூரில் விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு
ஓசூர்:
சூளகிரி அருகே கிருஷ்ணம்ம கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா. இவருக்கு ஷேஷாத்திரி (வயது 30), ஜனார்த்தனன் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த மல்லையா (46) என்ற விவசாயி இவர்களது உறவினர் ஆவார்.
இவர்களிடையே குடும்ப தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியார் வளாகத்தில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதத்ிரமடைந்த ஜனார்த்தனன், ஷேஷாத்திரி ஆகியோர் சேர்ந்து மல்லையாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வாலிபர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.