எருமப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

எருமப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

Update: 2022-09-04 17:03 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் புதூர் ஊராட்சி தோட்டமுடையான் பட்டியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 42). விவசாயி. இவருடைய வீட்டுக்கு செல்லும் சாலையில் அவருடைய அண்ணன் சண்முகவேல் (46) பந்தல் போடுவதற்காக பொருட்களை இறக்கினார். அப்போது அங்கு வந்த புகழேந்தி பந்தல் பொருட்களை சாலையில் வைத்தால் எப்படி செல்வது? என கேட்டுள்ளார். இதில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் தனது தம்பி புகழேந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் சண்முகவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்