செல்போன் டவரை காணவில்லை என போலீசார் வழக்குப்பதிவு
திருப்புல்லாணி அருேக செல்போன் டவரை காணவில்லை என போலீசார் கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்புல்லாணி அருேக செல்போன் டவரை காணவில்லை என போலீசார் கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒப்பந்தம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஒரு செல்போன் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்தம்போட்டு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த செல்போன் டவர் அதன்பின்னர் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது.
இந்தநிலையில் சென்னை புரசைவாக்கம் செல்போன் நிறுவன திட்ட பொறியாளர் அகிலன் (வயது44) என்பவர் ஆய்விற்காக அந்த டவர் பகுதிக்கு சென்றபோது டவரை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின்சாதனங்களுடன் கூடிய செல்போன் டவர், பேட்டரிகள், ஜெனரேட்டர், மின்னணு சாதனங்கள் என அனைத்தும் காணாமல் போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.31 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படுகிறது. செல்போன் டவர் இருந்த அடையாளமே இல்லாமல் இருந்துள்ளது.
வழக்குப்பதிவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலன் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய மனுத்தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்படி திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்புல்லாணி அருகே கிணத்தை காணோம் காமெடி பாணியில் செல்போன் டவரை காணோம் என வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.