அலுவலர்களுக்கு மிரட்டல் விடுத்த 18 பேர் மீது வழக்கு

அரசு புறம்போக்கு நிலத்தில் பாறைகளை உடைத்து கடத்த முயற்சியை தடுத்த அலுவலர்களுக்கு மிரட்டல் விடுத்த 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-03 15:37 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பாறை மற்றும் மலை குன்றுகளை சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து கடத்த முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர். வருவாய்த்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்தை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த பலர் அலுவலர்களுக்கு மிரட்டல் விடுத்து வாகனத்தை எடுத்து செல்வதை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் முருகானந்தம் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்