வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அடர்ந்தனார்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது33). இவர் உப்பூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடர்ந்தனார்கோட்டை கிராமத்தை சேர்ந்த விஜய் (25), ஹரிகிருஷ்ணன் (37), கார்த்திக் (26), சிவபாலன் (27) ஆகியோர் முன்விரோதம் காரணமாக சுரேஷ்குமாரை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.