மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-29 16:59 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே கட்டையம்பட்டி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பூத்திருவிழாவை முன்னிட்டு கட்டையம்பட்டி பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொடர்ந்து வாராப்பூர் கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் கட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, வடிவரசன், நாச்சான், சின்னையா, அழகு ஆகிய 5 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்