சூளகிரி:
சூளகிரி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 38). பழ வியாபாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நவீன், ராஜா ரவி மற்றும் அருண் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் ஜாபர் தனது நண்பர்களான சிக்கு, ஜலந்தர் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவீன், ஜலந்தரிடம் இருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்துவிட்டு காலி பாட்டிலை ஜலந்தர் மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஜாபரை, நவீன் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ஜாபர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நவீன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.