தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்ட உப்பனூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோபால். இவர் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பெல்லூர் கிராம சர்வே எண்ணில் உள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தளி போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து தொட்ட உப்பனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், சித்தமாரி, மதுசூதனன், மஞ்சுநாத் மற்றொரு மஞ்சுநாத் ஆகிய 5 பேர் மீது தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.