கார்கள் மோதல்; 7 பேர் படுகாயம்

சிவகங்கை சுற்றுவட்ட சாலையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-21 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை சுற்றுவட்ட சாலையில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜோன்ஜோஸ் (வயது 51). இவருடன் அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (51) சக்ரியன் (51) ஆகியோர் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றனர். சிவகங்கை சுற்றுவட்டசாலை அருகே வந்த போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உத்திராம்பட்டி கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை நோக்கி சென்ற கார், இவர்கள் சென்ற கார் மீது மோதியது.

இந்த சம்பவம் நடக்கும் போது பில்லுரை சேர்ந்த அய்யனார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது.

7 பேர் படுகாயம்

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த ஜோன்ஜோஸ், ஜான்சன், சக்ரியன் மற்றும் உத்திராம்பட்டியில் இருந்து வந்த காரில் பயணித்த ஜஹாங்கீர் (43) ஷகிலாபானு (37) தங்கமீரான் (47) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த அய்யனார் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்