லாரி மோதி தச்சு தொழிலாளி பலி

லாரி மோதி தச்சு தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-10 18:58 GMT

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). தச்சு தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், வீரணம்பட்டியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி கணேசன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கணேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் லாரி டிரைவரான மதுரை கம்பூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்