ஆற்றில் தச்சு தொழிலாளி பிணம்

மயிலாடுதுறை அருகே ஆற்றில் தச்சு தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2022-08-14 17:46 GMT
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கருமாதி மண்டபம் அருகில் காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தச்சுதொழிலாளி

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆற்றில் பிணமாக கிடந்தவர் சித்தர்காடு லட்சுமி நகரை சேர்ந்த ஹரிகேஷ் (வயது55) என்பதும், தச்சு தொழிலாளியான இவர், சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றதும், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகேஷ் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஹரிகேசுக்கு வாசுகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்