குழந்தை இல்லாத ஏக்கத்தில் தச்சு தொழிலாளி தற்கொலை
கரூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தச்சு தொழிலாளி தற்கொலை
கரூர் அருகே உள்ள வேலுச்சாமிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 41). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (36) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் விஜய் மன வேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று விஜய் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.