கார் மோதி தொழிலாளி பலி

கார்மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-07-05 20:00 GMT

தஞ்சை மாவட்டம் ஆலங்குடி வண்ணாரப்பேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர் திருச்சியில் தங்கி இருந்து கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று செந்தில்குமார் திருச்சி அண்ணாநகர் சிவபிரகாசம்சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம்அடைந்த அவரை அந்த பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்