மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; 4 மாத குழந்தை பலி

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; 4 மாத குழந்தை உயிரிழந்தது.

Update: 2023-03-17 18:45 GMT

திட்டக்குடி:

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 32). வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகவள்ளி(29). இவர்களுக்கு அஸ்விகா என்ற 4 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இந்த நிலையில் குழந்தை அஸ்விகாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்விகாவை, உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த தங்கமணி, ரம்யா, ஆனந்தி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் கற்பகவள்ளி உறவினர் ஒருவருடன் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

குழந்தை பலி

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தங்கமணி, ரம்யா, ஆனந்தி மற்றும் அஸ்விகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவா்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஸ்மிகாவை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்ற 3 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆனந்தி மட்டும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் 4 மாத பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்