கோத்தகிரி அருகே சரக்கு வாகனம்- ஆம்புலன்ஸ் மோதல்;தொழிலாளி பலி

கோத்தகிரி அருகே சரக்கு வாகனம்- ஆம்புலன்ஸ் மோதல்;தொழிலாளி பலி

Update: 2023-04-12 13:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி முருகன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுதேவன் (வயது 50). தொழிலாளி. இவர் குன்னூர் எடப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அவர்களது சொந்த வாகனத்தில் கொண்டுவந்துள்ளனர். ஒரசோலை பகுதியில் வரும்போது சுதேவனுக்கு மூச்சு திணறல் ஏற்ப்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் சதாசிவம் (23) மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சுதேவனை கொண்டு வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வரும் வழியில் கால்ப்லிங்ஸ் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகன டிரைவர் எந்தவொரு சிக்னலும் அளிக்காமல், திடீரென வாகனத்தை வலது புறம் உள்ள சாலையில் சரக்கு வாகனத்தை திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த சுதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்