திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-09-11 22:12 GMT

தாளவாடி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று புறப்பட்டது. இந்த சரக்கு வேன் நேற்று இரவு 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த தக்காளி அனைத்தும் ரோட்டில் சிதறியது. இந்த விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை போக்குவரத்து சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்