சரக்கு லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

காரையூர் அருகே சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2023-06-01 20:05 GMT

வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மேலப்பனையூர் அருகே உள்ள புரகரப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் வீரக்குமார் (வயது 22). இவரும் பூவக்கன்பட்டியை சேர்ந்த மெய்யர் மகன் கார்த்திக் (27) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கூடலூர்-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது எதிரே நெல் ஏற்றிவந்த சரக்கு லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வீரக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்கு

இதையடுத்து படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்