காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள பெ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெய்கணேஷ் (வயது 39). இவர் வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை காரில் வைத்து விட்டு காரியாபட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரது காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.