கார் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருட்டு போனது.

Update: 2023-02-26 18:45 GMT

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மெய்யனூர் பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், ஒரு மடிக்கணினி ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்