உளுந்தூர்பேட்டையில்கார் திருட்டு
உளுந்தூர்பேட்டையில் கார் திருடு போனது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை வி.கே.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 34). சம்பவத்தன்று இவர், தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தபகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.