குளத்துக்குள் கார் பாய்ந்து விபத்து

பேட்டை அருகே குளத்துக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-07-28 20:49 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி கீழ அக்ரஹார தெருவை சேர்ந்தவர் நாகநாதன் மகன் காசிராஜன் (வயது 40). கோவில் பூசாரி. இவர் நேற்று தனது காரில் உறவினர் ஒருவருடன் பாபநாசம் சென்றார். பின்னர் ஊர் திரும்பிய அவர், டவுனில் தனது உறவினரை இறக்கி விட்டு அங்கிருந்து சுத்தமல்லிக்கு பழைய பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார். பழைய பேட்டை கிருஷ்ணாபேரி வழியாக சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காசிராஜன் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்த பேட்டை போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு குளத்தில் இருந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்