கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; மீன் வியாபாரி பலி

பறக்கை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-09 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

பறக்கை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

மீன் வியாபாரிகள்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் வினித்குமார் (வயது24). இவரும் தலக்குளம் அருகே உள்ள பட்டரிவிளையை சேர்ந்த ஜெரின் (22) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்று அதிகாலையில் நண்பர்கள் இருவரும் மணக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெரின் ஓட்டி செல்ல வினித்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் பறக்கை அருகே செட்டிதெரு பகுதியில் வந்த போது நாகர்கோவிலில் இருந்து மணக்குடி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் வினித்குமார் மற்றும் ஜெரின் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். ஜெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தெங்கம்புதூரை சேர்ந்த அகிலன் (40) மீது சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்