கார் மோதி வாலிபர் பலி

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் கார் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2023-05-09 21:03 GMT

வல்லம்;

நாகை மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் ஜீவன்ராஜ் (வயது32).இவர் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஜீவன்ராஜ் இயற்கை உபாதைக்காக செங்கிப்பட்டி- கந்தர்வகோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது கந்தர்வக்கோட்டையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த கார் திடீரென ஜீவன்ராஜ் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜீவன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்