திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம்

திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

Update: 2023-10-24 19:00 GMT

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பின்னர் பெரிய தெப்பகுளத்தில் மாரியம்மன் திருவிழாவையொட்டி தெப்ப தேர் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்தாண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தெப்பத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான கள ஆய்வு நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தது வருகிறது.

இந்த நிலையில் தெப்ப தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டு 90 பேரல்கள் கொண்டு 20 அடிக்கு 20 அடி என அமைக்கப்பட்டிருந்த தெப்பம் இந்த ஆண்டு 150 பேரல்களை 28 அடிக்கு 28 அடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 அடுக்குகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 3 அடுக்குகள் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. இதில் உதவி கலெக்டர் சுகந்தி, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆய்வு செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்