மாரியம்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்

Update: 2023-01-18 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மாரியம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா பொங்கல் பண்டிகையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் திரவுபதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்