கடையம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

கடையம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-27 18:45 GMT

கடையம்:

சென்னை திருநீலகண்ட விநாயகர் நகரைச் சேர்ந்த தியாகராஜன் மகன் அசோக்குமார் (வயது 30). என்ஜினீயரான இவர் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த அமீது மகன் ஆஷிப், சென்னை ஆண்டாள் நகரை சேர்ந்த மற்றொரு அசோக்குமார் உள்பட 6 பேருடன் குற்றாலம் வந்தனர். இதில் மேற்கண்ட 3 பேர் மட்டும் குற்றாலத்தில் இருந்து பாபநாசத்திற்கு காரில் சென்றனர். அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு நேற்று மீண்டும் குற்றாலத்திற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். காரை ஆஷிப் ஓட்டினார்.

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியில் வந்த போது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் ேமாதியது. இதில் தியாகராஜன் மகன் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காரில் இருந்த ஆஷிப், மற்றொரு அசோக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடையம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்