மின்கம்பத்தில் கார் மோதல்; டிரைவர் பலி

களக்காடு அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.

Update: 2022-10-05 19:58 GMT

ஏர்வாடி:

களக்காடு அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.

மின்கம்பத்தில் கார் மோதல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). டிரைவரான இவர் தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். மேலசாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மேலச்சாலைபுதூரை சேர்ந்த மகேஷ் மனைவி ஸ்ரீதேவி என்பவர் மீதும் கார் மோதியதாக கூறப்படுகிறது.

டிரைவர் பலி

இந்த விபத்தில் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீதேவி படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்