மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய கார் - வாலிபர் படுகாயம்...!
கன்னியாகுமரி நான்குவழி சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.
அகஸ்தீஸ்வரம்,
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பெரியசாமி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 24 ). இவர் இன்று கன்னியாகுமரியில் இருந்து முருகன் குன்றம் வழியாக அகஸ்தீஸ்வரம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகன் குன்றம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்க முயன்ற போது கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் கன்னியாகுமரியை சுற்றி பார்த்துவிட்டு நாகர்கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஓட்டி வந்த சொகுசு கார் முருகன் குன்றம் அருகில் வைத்து. அப்போது திடீரென விஜய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் விஜய் தனது மோட்டார் சைக்கிளுடன் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில் விஜய்க்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காரும் சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.